168. குருபீடம் – ஜெயகாந்தன்

50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன – ஆன்மீகத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும். . .ஜெயகாந்தனின் எள்ளல் கதை முழுக்க கொப்பளிக்கிறது. . .

நான் பதிந்திருக்கும் ஜெயகாந்தனின் மற்ற கதைகள்

⁠146. பாவம், பக்தர் தானே – ஜெயகாந்தன்⁠

⁠137. அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன்⁠

⁠111. ஒரே நண்பன் – ஜெயகாந்தன்⁠

⁠20. இருளில் ஒரு துணை – ஜெயகாந்தன்⁠

⁠18. அக்ரஹாரத்துப் பூனை – ஜெயகாந்தன்⁠

⁠17. லட்சாதிபதிகள் – ஜெயகாந்தன்⁠

⁠2. தோத்தோ – ஜெயகாந்தன்⁠

⁠1. பித்துக்குளி – ஜெயகாந்தன்

167. அன்னங்களும் பட்சிகளும் – அம்பை

நாம் அனைவருமே ஒரு நாள் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருப்போம். பச்சிளம் குழந்தைக்கு கூட நினைவுகள் – தாயின் மொழி , புடவை. . .புலம்பெயர்ந்த குடும்பங்கள் மங்கலாகிப் போகும் நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள செய்யும் முயற்சிகள் அர்த்தமற்றவையாகின்றன அடுத்த தலைமுறைக்கு. . . நினைவுகளின் தொகுப்பாய் இந்தக் கதை. . .

⁠அம்பை⁠ தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.

நான் பதிந்திருக்கும் அம்பையின் மற்ற கதைகள்.

⁠118. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை

166. நூறு நாற்காலிகள் – ஜெயமோகன்

Summary

சாதீய கொடுமைகள் முக்கியமாக இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒன்று மேல்சாதியினரின் ஒடுக்குமுறைகள் ஏளனப்பேச்சுகள் கூனிக்குறுகச்செய்யும் இழிவுச் செயல்கள். மற்றொன்று மிகக்கொடிய சுயவிரக்கம் – எப்போதும் எங்கும் தன்னை தாக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேற முடியாத நிலைமை.

இது ஒரு நெடுங்கதை. ஆனால் படித்த / கேட்ட பிறகு உங்களுக்குள் எழும் கேள்விகளிடம் இருந்து தப்ப முடியாது . . .

நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள்

161. வணங்கான் – ஜெயமொகன்

147. தாயார் பாதம்

110. இங்கே , இங்கேயே

101. அப்பாவும் மகனும்

73. ஐந்தாவது மருந்து

54. பாடலிபுத்திரம்

27 – 2 . யானை டாக்டர் – இறுதி பகுதி

27 – 1 . யானை டாக்டர் – முதல் பகுதி

14. சோற்றுக்கணக்கு

8. மாபெரும் பயணம் — Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription

165.கண்ணாடிப் பரப்பு – கமலதேவி

Summary

சில விஷயங்கள் நமக்கு பிடித்தவை சில பிடிக்காதவை. பிடிக்காதவற்றை பார்க்கும்போதும் எண்ணும்போதும் நிகழும் மனநிலை வெறும் ஒரு கண்ணாடி போலத் தான்.  இது புரியும்போது திரை விலகுகிறது புதிய பார்வைகள் வந்துசேர்கின்றன. பிடிக்காதவையும் மனதை தொடுகின்றன. . . — Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription

162. அனந்தசயனம் காலனி- தோப்பில் முகமது மீரான்

Summary

தோப்பில் முஹம்மது மீரான் ஒரு மிகச்சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதி. அவசர யுகத்தில் அக்கமபக்கம் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாத இரக்கம் மனிதாபிமானம் என்ற மனிதத் தன்மையே மறந்துவிட்ட பட்டணத்து மேல்தட்டு மக்களை தலையில் குட்டும் கதை இது. — Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription

161. வணங்கான் – ஜெயமொகன்

Summary

நமக்கு இரண்டு மூன்று தலைமுறைகள் முன்னால் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்தால் இட ஒதுக்கீடு ஏன் சரியானது என்று புரியுமோ?

நேசமணி என்ற பெருந்தலைவர் பற்றி தெரியாமலே போனதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் போல.

ஜெயமொகனின் இந்தக் கதையில் அவர் கையாண்டிருக்கும் பரிமாணங்கள் படிமங்கள் எத்தனை எத்தனை? நடுநடுவே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவையும் உண்டு. . . — Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription

160. கறிவேப்பிலைகள் – கி.ரா

Summary

படிக்க முடியாமல் தொண்டை அடைக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. கிராமத்து சூழல் அழிந்து வரும் ( அழிந்து விட்டதோ?) சொல்லாடல்கள் கொட்டிக்கிடக்கும் இந்தக்கதை நிலமற்ற விவசாயக் கூலிகளின் வாழ்க்கை போராட்டத்தை கண் முன் நிறுத்துகிறது. . . — Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription

159. முள்முடி – தி.ஜா

Summary

ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை.
குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளின் கணமேனும் காத்தல் அரிது எனும் குறளும் ஏனோ ஞாபகம் வருகிறது. . .
— Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription

158. தனியொருவனுக்கு – அசோகமித்திரன்

Summary

மனிதனின் இந்த அடிப்படைத் தேவையைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்? — Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription

157. சித்தி – மா. அரங்கநாதன்

Summary

நெடுந்தொலைவு ஓட்டக்காரர்களுக்கு ஒரு கதை!. ஓடும்போது ஏற்படும் மனநிலையை சரியாக படம்பிடிக்கும் அரங்கநாதன் நிச்சயம் அரை மராத்தனாவது ஓடியிருப்பார் !!  — Support this podcast: https://anchor.fm/rams1/support

Transcription